உலகின் ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவுகள் இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.
முதற்கட்டத் வாக்குப்பதிவுகள் 17 மாநிலங்கள், 102 தொகுதிகளில் நடைபெறவுள்ளன.
தமிழ்நாடு, அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரப் பிரதேசம் , உத்தராகண்ட், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.
அத்துடன் புதுச்சேரி, அந்தமான், நிக்கோபார், ஜம்மு – காஷ்மீர், இலட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் இன்று தேர்தல் நடைபெறவுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 6 கோடியே 23 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்திய மக்களவைத் தேர்தல் ஜூன் மாதம் முதலாம் திகதியோடு நிறைவடைகின்றது.
இதேவேளை, மக்களவைத் தேர்தலுக்காக தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு இன்று விடுமுறையளிக்க இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.