ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்படுமா? 

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியமும், அமெரிக்கத் தூதரகமும் இலங்கையை ஆட்சி செய்வதாக சுட்டிக்காட்டிய விமல் வீரவன்ச, இதன் காரணமாக ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும், உமா ஓயா திட்டத்திற்கு ஈரான் உதவியுள்ளமையினால்,  அதன் திறப்பு விழாவில் குறித்த நாட்டின் தலைவருக்கு பங்கேற்க உரிமை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஈரானிய நிறுவனங்களின் பாரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் உமா ஓயா திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்யவதற்காக  ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளமை  தொடர்பில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version