உயிரிழந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று (19) இடம்பெற்றன.
பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும் காலத்தில், அவரால் தயார் செய்யப்பட்ட மயானத்தில் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கடந்த 16ம் திகதி அவருடைய வீட்டில் மின்சாரம் தாக்கியதன் காரணமாக உயிரிழந்தார்.
2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய பாலித தெவரப்பெரும, உள்நாட்டலுவல்கள், வடமேற்கு அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சராகவும் மற்றும் வனவிலங்கு பிரதி அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.
பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.