பாடசாலைகளில் 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை

நாட்டில் உள்ள பாடசாலைகளில் 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேல், கிழக்கு, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அவர் ஊடக சந்திப்பொன்றில்  சுட்டிக்காட்டியுள்ளார்.

மேல் மாகாணத்தில் சுமார் 7,000 ஆசிரியர்களுக்கும், மத்திய மாகாணத்தில் சுமார் 6,200 ஆசிரியர்களுக்கும், கிழக்கு மாகாணத்தில் சுமார் 3,800, வடமத்திய மாகாணத்தில் 3,698 மற்றும் தென் மாகாணத்தில் 3,100 ஆசிரியர்களுக்கும் பற்றாக்குறைகள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அரசாங்கம் செலவினங்களை கட்டுப்படுத்த, ஆசிரியர் நியமனங்களை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகவும் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேல் மாகாணத்திற்கு இரண்டு தடவைகள்  2,500 ஆசிரியர்கள் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட போதும், குறித்த ஆட்சேர்ப்பு முறையாக மேற்கொள்ளப்படவிலல்லை  எனவும்  ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஆகவே, தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு உரிய முறையில் ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version