ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
எதுல்கோட்டையில் இன்று(21.04) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், தற்போது விஜயதாச ராஜபக்ஷ பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்