மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் 

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்கிரமசிங்கவை, மக்கள் முன்னதாகவே ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

களனியில் நடைபெற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தேர்தலை இலக்கு வைத்து இத்தகைய நலன்புரி செயற்பாடுகளை  முன்னெடுக்கவில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர், மக்கள் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version