போதைப் பொருட்களை அழிக்க விசேட திட்டம்

யுக்திய சுற்றிவளைப்பில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை எதிர்வரும் மாதத்திற்குள் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருட்களை அழிப்பதற்கு புத்தளம் மாவட்டத்தில் விசேட இடமொன்று முன்னதாகவே உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version