ராஜஸ்தான் அணி அபார வெற்றி – RR vs MI

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

ஜெய்ப்பூரில் இன்று(22.04) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி, மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

மும்பை அணி சார்பில் திலக் வர்மா 65 ஓட்டங்களையும் நேஹல் வாதேரா 49 ஓட்டங்களையும் மற்றும் நபி 23 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

ராஜஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளையும், போல்ட் 2 விக்கெட்டுகளையும், அவேஷ் கான் மற்றும் யுவேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 200 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்ட முதல் வீரர் என்ற சாதனையை யுவேந்திர சாஹல் இன்று தனதாக்கிக் கொண்டார். 

180 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 6 ஓவர்களில் 61 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி சில நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

பின்னர், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.ராஜஸ்தான் அணி சார்பில் 

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 104 ஓட்டங்களையும், சஞ்சு சாம்சன் 38 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

மும்பை அணி சார்பில் பந்துவீச்சில் பியூஷ் சாவ்லா ஒரு விக்கெட்டினை  கைப்பற்றினார். 

இதன்படி, இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளினால் அபார வெற்றியீட்டியதுடன் போட்டியின் ராஜஸ்தான் அணியின் சந்தீப் சர்மா தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய ராஜஸ்தான் அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசைப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதல் இடத்திலும், மும்பை அணி 6 புள்ளிகளுடன் 7ம் இடத்திலும் உள்ளது. 

இதேவேளை, தொடரின் நாளைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

சென்னையில் நாளை(23.04) இரவு 7.30 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version