அமரவீர, லசந்த, துமிந்தவிற்கு  நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக குறித்த மூவரும் தாக்கல் செய்த முறைப்பாடுகள் இன்று(24.04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவும், பொருளாளர் பதவியில் இருந்து இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ணவும் மற்றும் சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்து அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் நீக்கப்பட்டிருந்தனர். 

தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் குறித்த மூவரையும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து நீக்குவதற்கு கட்சி செயற்குழு தீர்மானித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version