ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று(25.04) நடைபெற்ற சுதந்திர கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு, சுதந்திர கட்சியின் அரசியல் குழு கூட்டம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கொழும்பில் நேற்று(25.04) நடைபெற்றது.