Online முறைமையினூடாக விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் e visa பகுதியை மாத்திரம் பயன்படுத்துமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் www.srilankaevisa.lk இணையத்தளத்தினை போன்று போலி இணையத்தளம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த 17 ஆம் திகதியிலிருந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் புதிய விசா முறைமை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.