ஶ்ரீலங்கா கிரிக்கெட் அனுசரணையுடன் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வட மாகாணத்தின் மாபெரும் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் Mullai Panthers அணி வெற்றி பெற்றுள்ளது.
வவுனியா நகர சபை மைதானத்தில் இன்று(27.04) காலை 10.15 மணிக்கு, Jaffna Gladiators மற்றும் Mullai Panthers அணிகளுக்கு இடையிலான போட்டி ஆரம்பமானது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Mullai Panthers அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, Mullai Panthers அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
Mullai Panthers அணி சார்பில் கபிலன் மகேந்திரன் 32 ஓட்டங்களையும், எஸ் ஷாஜித் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்
Jaffna Gladiators அணி சார்பில் பந்துவீச்சில் டி டனிசியஸ் மற்றும் ஆர் நியூட்டோ தலா 3 விக்கெட்டுகளையும், எஸ் அஜித் 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
137 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Jaffna Gladiators அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
Jaffna Gladiators அணி சார்பில் எஸ் அஜித் 35 ஓட்டங்களையும், கே பானுஜன் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
Mullai Panthers அணி சார்பில் பந்துவீச்சில் கபிலன் மகேந்திரன் 3 விக்கெட்டுகளையும் குமாரசாமி சதுர்ஜனன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்படி, இந்த போட்டியில் Mullai Panthers அணி 5 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன் போட்டியின் ஆட்ட நாயகனாக Mullai Panthers அணியின் கபிலன் மகேந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.