மனந்திறந்த இயக்குநர்

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 2ஆம் திகதி ஜெய் பீம் படம் வெளியானது.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு காட்சியினால் தற்போது வரை குறிப்பிட்ட ஒரு சமூகம், ஜெய் பீம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதற்காக 5 கோடி ரூபாய் நஷ்டஈடாக தரவேண்டும் என்று அச்சமுகத்தினர் கூறியிருந்தனர்.

இதுமட்மின்றி, நடிகர் சூர்யாவை முதலில் எட்டி உதைக்கும் நபருக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என்று அந்த சமூகத்தை சார்ந்த ஒருவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இயக்குநர் ஞானவேல் இந்த பிரச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது வருத்தத்தை கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

இதில் ” தனி மனிதராயோ, குறிப்பிட்ட சமூகத்தையோ, அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை ” என்று கூறி தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

மனந்திறந்த இயக்குநர்
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version