கூந்தல் பராமரிப்பின் இரகசியங்கள்

நம் உடலில் அதிகப்படியான கவர்ச்சியை வெளிப்படுத்துவதில் கூந்தலுக்கே பிரதான இடமுண்டு. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மிக முக்கியமான அழகுப்படுத்தல் விடயம் என்றாலே அது கூந்தல் பராமரிப்பு தான்.

ஆனாலும் இளம் வயதிலேயே பலரும் இளம் நரை, பொடுகு தொல்லை, முடி உதிர்தல், வழுக்கை, வறண்ட கூந்தல் போன்ற ஏராளமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

இத்தகைய பிரச்சனைகளுக்கானத் தீர்வு பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஏராளமான முறைமைகள் சொல்லப்பட்டுள்ளன.

வீட்டிலிருந்தவாறே அவற்றை தவறாது செய்து வந்தோமெனில் கூந்தல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கண்டு விடலாம்.

முதலில், முடி பளபளப்பு குறையும் போது எலுமிச்சை சாற்றில் முடியை அலசி எடுங்கள். பளபளப்பான கூந்தலை பெறுவதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து குளிக்கலாம்.

முடி உதிர்தல் பிரச்சனை இருக்கும் போது தேங்காய்ப்பால் அல்லது தேங்காயெண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்தலை கட்டுப்படுத்தலாம்.

கூந்தல் அதிகமாக வறண்டு இருந்தால் தேனுடன் ப்ரெஷ் ஃக்ரீம் கலந்து முடிக்கு மாஸ்க் போட்டு நீரில் அலசி எடுக்கலாம்.

கூந்தலை சுத்தம் செய்ய கெரட்டின். ரோஸ்மேரி, தாவர புரதங்கள் மற்றும் கடற்பாசி சாறு போன்ற மூலப்பொருள்களை கொண்ட இயற்கையான ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்துங்கள்.

பொடுகு தொல்லை நீங்க இரவில் படுப்பதற்கு முன்னர் ஒரு டம்ளரில் தேவையானளவு வெந்தயத்தை இட்டு நீரூற்றி ஊரவிட்டு, காலையில் அதனை நன்றாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு வராமல் தடுக்க முடியும்.

இவற்றை வாரத்திற்கு ஒருமுறை செய்து வாருங்கள். கூந்தலில் ஏற்படும் நல்ல மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.

கூந்தல் பராமரிப்பின் இரகசியங்கள்
Social Share
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version