கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் விலையில் மாற்றம்

எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் உணவு பொருட்கள் சில்வற்றின் விலைகளை குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகிய உணவுகளின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளில் மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version