நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கம் – முதல் 04 மாதங்களில் இவ்வளவு உயிரிழப்பா?

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 04 மாதங்களில் நாட்டில் 22,443 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த காலப்பகுதியில் 09 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் அதிளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதன்படி,எட்டாயிரத்து 71 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வட மாகாணத்தில் 4375 டெங்கு நோயாளர்களும் மத்திய மாகாணத்தில் 1890 பேரும், வடமேல் மாகாணத்தில் 1616 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்தில் 1855 பேரும், தென் மாகாணத்தில் 1723 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version