ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று முன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் கொழும்பு துறைமுகத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தம் குறித்தும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.