காலிஸ்தான் பயங்கரவாதி படுகொலை – இந்தியர்கள் மூவர் கைது

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை தொடர்பில் இந்தியர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்
அவர்களது புகைப்படங்களையும் கனேடிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

நிஜ்ஜார் கடந்த வருடம் ஜூன் மாதம் 18 ஆம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் நிஜ்ஜாரின் படுகொலையுடன் தொடர்புடைய 22 வயதுடடைய இரு இளைஞர்கள் மற்றும் 28 வயதுடைய நபரொருவரை கனேடிய பொலிஸார் நேற்று (04) கைது செய்யதனர்.

இவர்கள் சுமார் 05 வருடங்களாக கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வசித்து வந்துள்ளனர்.

படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு சந்தேகநபர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர்களுக்கு இந்திய அரசாங்கத்துடனான தொடர்புகள் குறித்து விரிவாக ஆராயப்படும் எனவும் அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version