மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது 

கொழும்பில் பம்பலப்பிட்டி, காலி வீதி மற்றும் டுப்ளிகேஷன் வீதியில் பொழுதுபோக்கிற்காக மோட்டார் சைக்கிள்களை கவனயீனமாகவும் அபாயகரமாகவும் ஓட்டிச் சென்ற 20 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை கவனயீனமாகவும் அபாயகரமாகவும் ஓட்டிச் செல்வதாக பொதுமக்களிடம் இருந்து பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதற்கமைய அதிகாலை வேளையில் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசேட சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.  

இதன்போது, 20 பேர் மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்களை கவனயீனமாகவும் அபாயகரமாகவும் வீதிகளில் ஓட்டிச் செல்லும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version