சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இலவச சுற்றுலா விசாக்களை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, அரசாங்கம் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சந்திமா விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் சுற்றுலா, குடிவரவு, பாதுகாப்பு மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிபுணர்கள் உள்ளடங்குகின்றனர்.
இந்த குழு, சர்வதேச ரீதியில் இலவச சுற்றுலா விசா முறைமைகளின் ஊடாக சுற்றுலாத்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய துறைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தை ஆராயவுள்ளது.
மேலும், ஏனைய நாடுகளில் வெற்றிகரமாக அமுலாக்கப்பட்ட இலவச சுற்றுலா விசா பகுப்பாய்வு செய்யவுள்ளதுடன், இலங்கையில் இத்தகைய முறைமையினை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சாத்தியக்கூறுகள் மற்றும் சாதக பாதகங்களை குறித்த குழுவின் ஊடாக ஆராயப்படவுள்ளது.
ஒரு மாத காலத்திற்குள் இலவச சுற்றுலா விசா முறைமை தொடர்பிலான குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.