பராட்டே சட்டத்தை இடைநிறுத்தும் யோசனைக்கு நாடாளுமன்றம் அனுமதி

பராட்டே சட்டம் எனப்படும் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனை மீள அறவிடுவதற்கான விசேட ஏற்பாடுகளைக் கொண்ட சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலம் நேற்று (07) நாடாளுமன்றத்தில் திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டது.

ஏதேனும் சொத்தொன்றை அடகு வைத்து பெறப்பட்ட கடனை மீளச் செலுத்துவதற்கு ஒருவர் தவறும் பட்சத்தில், குறித்த சொத்தை ஏலத்தில் விட்டு நிதி நிறுவனம் பணம் வசூலிப்பதற்கான இயலுமை பராட்டே சட்டத்தின் மூலமே கிடைக்கின்றது.

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட தொற்று நிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடி என்பவற்றால் சொத்துகளை அடகு வைத்து கடனை பெற்ற பெரும்பாலானோர் அதனை திருப்பிச் செலுத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version