மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை சமர்பிக்க மின்சார சபைக்கு காலவகாசம்

மின் கட்டண குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்மாதம் முதலாம் திகதி இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை அதற்கு கால அவகாசத்தை கோரியிருந்த நிலையில்
எதிர்வரும் 10ஆம் திகதி வரை முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் மின் கட்டணங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி மின் கட்டணங்களை குறைப்பது தொடர்பான விபரங்களை ஜூலை மாதத்தில் அறிவிக்க முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version