2024ம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அனுசரணை இந்தியாவின் அமுல் (Amul) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை 20 அணிகள் பங்கேற்கும் உலக கிண்ண தொடரில், பங்களாதேஷ், நேபாளம், நெதர்லாந்து, தென்னாபிரிக்க அணிகளுடன் இலங்கை அணியும் D குழுவில் இடம் பெற்றுள்ளது.
உலக கிண்ண தொடரில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் எதிர்வரும் ஜூன் மாதம் 3ம் திகதி தென்னாபிரிக்காவை எதிர்கொள்கின்றது.
இதேவேளை, இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணிக்கும் இந்தியாவின் அமுல் (Amul) நிறுவனம் உத்தியோகபூர்வ அனுசரணை வழங்குகின்றது.