இலங்கை பிரஜைகள் அல்லாதவர்கள், இலங்கையில் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு எவ்வித சட்ட ரீதியான தடைகளும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரஜை அல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதை மட்டுமே இலங்கைச் சட்டம் தடை செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கை பிரஜை அல்லாதவர்கள் தேர்தலில் வாக்களிப்பதையும் இலங்கை சட்டம் தடை செய்வதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு சட்டரீதியாக தகுதியற்றவர் என உயர்நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுவில் கையொப்பமிடவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.