தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
மனித இம்யூனோகுளோபுலின் மருந்து கொள்வனவு தொடர்பில் தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி நேற்று (08.05) கைது செய்யப்பட்டார்.
சுமார் 10 மணித்தியாலங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
மனித இம்யூனோகுளோபுலின் மருந்து கொள்வனவு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.