பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

இலங்கை வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான நிலையத்தில் வைத்து Online ஊடாக ‘சுகாதார சுயவிவர படிவத்தை’ பூர்த்தி செய்யுமாறு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.

விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் உடல்நல பரிசோதனைகளை எளிதாக்கும் முகமாகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய விமானங்களில் இணைய வசதி இருந்தால் அல்லது விமான நிலையங்களில் தரையிறங்கிய பின்னர் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.airport.lk/health_declaration/index என்ற இணையதள முகவரிக்குள் பிரவேசித்து தங்களது சுய விபரங்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக இந்த சுயவிபர படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version