களைநாசினி பதிவாளர் பதவி நீக்கம்

Glyphosate களைநாசினி மீதான தடையை நீக்கிய சம்பவம் தொடர்பில் களைநாசினி பதிவாளர் ஜே.ஏ.சுமித் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Glyphosate உள்ளிட்ட 5 களைநாசினிகளை பயன்படுத்துதல் மற்றும் விற்பனையை தடை செய்யும் வர்த்தமானியை இரத்து செய்யும் வகையில், நேற்றிரவு (22/11) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை களைநாசினி பதிவாளர் ஜே.ஏ.சுமித் வெளியிட்டிருந்தார்.

அதற்கமைய அரச கொள்கைக்கு மாறாக செயற்பட்ட களைநாசினி பதிவாளர் ஜே.ஏ.சுமித் மீது ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் (23/11) குறித்த களைநாசினி பதிவாளரை பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

களைநாசினி பதிவாளர் பதவி நீக்கம்
Agricultural worker takes care of his estate
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version