முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 28ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனு, காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று(10.05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, டயானா கமகே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, குறித்த மனு மீதான தீர்மானத்தை அறிவிப்பதற்கு திகதி வழங்குமாறு கோரினார்.
அதன்படி, குறித்த மனுவை எதிர்வரும் 28ம் திகதிக்கு விசாரணைக்கு கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டோர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.