பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக சஜித் குற்றச்சாட்டு 

மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் வர்த்தகப் பிரிவு பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று(10.05) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது நியமனம் வழங்கப்பட்டு வரும் நிலையில், 6000 வெற்றிடங்களில் 2951 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். 

எனினும் வர்த்தகப் பிரிவு பட்டதாரிகளில் 1200 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும், ஒரு வர்த்தக பட்டதாரிக்கேனும் இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். 

இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி, வர்த்தகப் பிரிவு பட்டதாரிகளுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version