தேர்தலுக்காக பகிரும் பணத்தை பாடசாலைகளுக்கு வழங்குமாறு கோரிக்கை 

ஆலோசனைக் குழு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 10 மில்லியன் ஒதுக்குகின்றனர். இந்த பணத்தில் 10 திறன் வகுப்பறைகளை வழங்க முடியும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம், 341 உள்ளூராட்சி மன்றங்களில் 3410 திறன் வகுப்பறைகளை நிறுவ முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தலை இலக்காகக் கொண்டு வழங்கப்படும் இந்த நிதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும், இந்தப் பணத்தை பயன்படுத்தி பாடசாலைகளுக்கு கணனி வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆலோசனைக் குழு குறித்து வினவப்பட்ட கேள்விக்கான பதில்கள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் இதுவரையில் அது சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், இது குறித்து ஆராயுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version