உயர்தர வகுப்புக்களை உடனடியாக ஆரம்பிப்பதில் சிக்கல் 

உயர்தர வகுப்புக்களை உடனடியாக ஆரம்பிப்பதில் சிக்கல் க.பொ.த சாதாரணத் தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னர் உயர் தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதில் பல சிக்கல்கள் நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னர் உயர் தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. 

இதன்படி, இன்றுடன்(15.05) நிறைவடையும் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை எதிர்வரும் மாதம் 5ம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சாதாரண தரம் வரை மாத்திரம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பாடசாலையில் உள்ள மாணவர்களை, உயர்தரத்திற்காக அருகிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாடசாலைகளில் நிலவும் வளங்கள் பற்றாக்குறை காரணமாக உயர் தரத்திற்கான வகுப்புகளை உடனடியாக ஆரம்பிப்பதில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version