முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பிரித்தானியாவுக்கு இடம்பெயரவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மறுத்துள்ளார்.
‘டயானா தனது தாய் நாட்டிற்கு செல்லவுள்ளார்’ என்ற தலைப்பில் இணையதளங்களில் செய்திகள் பரவியிருந்த நிலையில், இலங்கையே எனது தாய்நாடு என டயானா கமகே பதிலளித்துள்ளார்.
பிரித்தானிய பிரஜையான டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் கடந்த 8ம் திகதி தீர்ப்பளித்திருந்தது.