டயானாவின் ஊழலுக்கு துணை நின்ற அரச அதிகாரி 

பதவி நீக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவின் ஊழலுக்கு ஹர்ஷ இலுக்பிடிய எனும் அரச அதிகாரியொருவர் துணை நின்றதாக சமூக செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் தெரிவித்தார். 

கடந்த 17ம் திகதி நடைபெற்ற புதிய சுதந்திர முன்னணியின் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரதே டயானா கமகேவிற்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் ஊடாகவே, டயானா கமகே பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார். 

இந்த ஊடக சந்திப்பின் போது டயானா கமகே பதவி நீக்கத்திற்கு புதிய சுதந்திர முன்னணி வகித்த பங்கு தொடர்பில்  விளக்கமளிக்கப்பட்டதோடு, டயானா கமகேவிற்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. 

டயானா கமகே பிரித்தானிய பிரஜை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக உரிய சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என சமூக செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் தெரிவித்தார்.

மேலும், டயானா கமகேவின் ஊழல் மிக்க செயற்பாடுகளும் துணையாக இருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டு பணிப்பாளர் ஹர்ஷ இலுக்பிடியவுக்கு எதிராகவும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

புகைப்படம் மற்றும் தகவல்
நிருபர்
ரஞ்சித்குமார் (அவிஸ்ஸாவளை)

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version