ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதியை காணவில்லை!! 

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் அசர்பைஜானை அண்மித்து அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில்,  ஹெலிகொப்டரில் இருந்த ஈரான் ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை காணவில்லை என  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டோரை பயணித்த ஹெலிகொப்டர், ஈரான் – அசர்பைஜான் எல்லையை அண்மித்த ஜொல்பா நகரில் தரையிறக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரச ஊடக வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்ட இடத்தை மீட்புக்குழு அண்மித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த போதும், இதுவரையில் ஈரான் ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை மீட்புக்குழுவினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

ஈரான் ஜனாதிபதி இன்று(19.05) காலை அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடன் நீர்ப்பாசனத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version