ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிற அதிகாரிகளின் உயிரிழப்பினால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட X தள பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், ஈரான் அரசாங்கத்திற்கும், அந்நாட்டு மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இப்ராஹிம் ரைசியின் குடும்பத்தினருடன் தமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.