ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை   

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு எதிர்வரும் வெசாக் போயா தினத்தில் பொது மன்னிப்பு வழங்குமாறு பிரதம பௌத்த பிரதம பீடாதிபதிகளால் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதம பீடாதிபதிகள் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தின் ஊடாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.  

கடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது கூரகல விகாரை தொடர்பில் மதங்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து, தேசிய நல்லிணக்கம் மற்றும் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரர் 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், தேசிய ஒற்றுமை மற்றும் சமூக ஆதரவை மேம்படுத்தும் வகையில் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை பிரதம பௌத்த பீடாதிபதிகளால் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

சமூகத்தில் இடம்பெற்ற தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்க ஞானசார தேரர் நடவடிக்கை எடுத்துள்ளாதாக  பிரதம பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், ஞானசார தேரரின் நடவடிக்கைகள் இலங்கையில் சில தீவிரவாதக் குழுக்கள் பரவுவதைத் தடுக்க பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவாக இருந்துள்ளதாகவும் பிரதம பீடாதிபதிகளினால் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version