ஓரே நேரத்தில் இரண்டு தேர்தல்களை நடத்துமாறு எதிர்க்கட்சி வலியுறுத்தல்  

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா வலியுறுத்தியுள்ளார். 

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அரசியல் வட்டாரங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில் ஹர்ஷன ராஜகருணா இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி எந்தவொரு தேர்தலுக்கும் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில்  பலரின் ஆதரவைப் பெற்றுக் கொள்வார் எனவும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய அணியும் தம்முடைய கட்சியில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதில் எவ்வித சட்ட ரீதியான தடைகளும் இல்லை எனவும்  பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். 

அமைச்சரவையில் இருப்பவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்பதால், தற்போதைய ஜனாதிபதிக்கு அப்பதவியை வகிப்பதற்கான மக்கள் ஆணை இன்மையால், இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துதே சரியானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version