ஈரானில் பதில் ஜனாதிபதி மற்றும் தற்காலிக வெளியுறவு அமைச்சர் நியமனம்

ஈரானின் பதில் ஜனாதிபதியாக அந்நாட்டு துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர் பதவியேற்கவுள்ளார்.

ஈரானின் அரசியலமைப்பின் பிரகாரம் புதிய ஜனாதிபதி 50 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இதேவேளை தற்காலிக வெளியுறவு அமைச்சராக அலி பகேரி கனி நியமிக்கப்பட்டுள்ளார்

வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உயிரிழந்துள்ள நிலையில் ஈரான் அமைச்சரவை துணை வெளியுறவு அமைச்சர் அலி பகேரி கனியை தற்காலிக வெளியுறவு அமைச்சராக நியமித்துள்ளது.

அவர் செப்டம்பர் 2021 முதல் துணை வெளியுறவு அமைச்சராக பணியாற்றியுள்ளதோடு, கடந்த 2007 மற்றும் 2013 க்கு இடையில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலாளராக பணியாற்றியுள்ளார்.

இதேவேளை, ஈரானின் மதத் தலைவர் அலி கமேனி ஐந்து நாட்கள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version