இந்தோனேஷியாவில் இடம்பெறும் 10 வது உலக நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20) உரையாற்றினார்.
உக்ரைனில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நிதி வழங்குவதற்கு தயாராகவுள்ள வடதுருவ நாடுகள், காலநிலையால் ஏற்படும் அழிவுகளை தடுப்பதற்கு நிதி வழங்க தயங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் ” உலகளாவிய வரி ஏய்ப்பு தொடர்பான சொத்துக்களின் வருடாந்த இலாபம் 1.4 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது”
இதனால் அந்த இலாபத்தின் மீது காலநிலை மாற்ற நிதியத்திற்காக 10 வீத வரி விதிக்கும் யோசனையை இலங்கை முன்மொழிந்துள்ளது” என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.