இந்தியாவில் கைதான ISIS சந்தேக நபர்கள் தொடர்பில் இலங்கையில் விசாரணைகள் ஆரம்பம்

நேற்று(20.05) இந்தியா, குஜராத் அஹமதாபாத் விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் இலங்கையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. கைதானவர்கள் பின் புலம் மற்றும் உண்மையிலேயே ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புபட்டவர்களாக என்பது தொடர்பில் ஆராய்வதற்கு இந்தியாவிடம் மேலதிக விபரங்களை இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவு கோரியுள்ளது என உயர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் ரிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் முன்னுரிமை கொடுத்து இந்த விடயத்தில் செயற்படுவதாகவும் கூறியுள்ளனர். “இந்திய உயர் அதிகாரிகளுடன் இந்த விடயம் தொடர்பில் பேசசுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அச்சுறுத்தல்கள் ஏதும் உள்ளனவா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ரிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த நால்வர் நேற்று இந்தியா, குஜராத், அஹமதாபாத் விமான நிலையத்தில் அவர்களை செயற்படுத்தும் ஒருவருக்காக காத்திருந்த வேளையில் இந்தியா தீவிரவாத தடுப்பு பிரிவினரால் ISIS அமைப்புடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

Social Share

Leave a Reply