பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி குறிகட்டுவானிற்கும், நெடுந்தீவிற்கும் இடையிலான கடற்போக்குவரத்து இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் இன்று கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்
பிரிவின் பிரதிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
வானிலை எதிர்வுகூறல்களையும் அறிவுறுத்தல்களையும் கருத்திற்கொண்டு பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.