நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மரங்கள் மற்றும் பாறைகள் தண்டவாளத்தில் விழுந்துள்ளமையினால் ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பதுளை நோக்கி பயணிக்கும் மற்றும் பதுளையிலிருந்து புறப்படவுள்ள இரவு நேர அஞ்சல் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மலையகப் மார்க்கத்திலான மேலும் பல சிறப்பு ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
தண்டவாளங்களில் விழுந்துள்ள மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.