கொழும்பின் சில வீதிகள் இன்றும் மூடப்பட்டுள்ளன

கொழும்பை சுற்றியுள்ள பல பிரதான வீதிகள் இன்று இரவும் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்வதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை‌ தவிர்க்கும் வகையில் வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ, தெரிவித்தார்.

இதன்படி, பௌத்தாலோக மாவத்தை மலலசேகர சந்தியிலிருந்து தும்முல்லை சுற்றுவட்டம் வரையும், விஜேராம வீதி கிரிகோரி வீதி சந்தியிலிருந்து பௌத்தாலோக வீதி வரையும், பெரஹெர மாவத்தை ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை சந்தியிலிருந்து ரொட்டுண்டா சந்தி வரையும், பிரே புரூக் பகுதியும் மூடப்படவுள்ளன.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version