எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தாய்லாந்துக்கு விஜயம்

மியன்மாரில் இணையவழி குற்ற முகாம்கள் மற்றும், ரஷ்ய – உக்ரைன் போர் முனையில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் நோக்கில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூவர் தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

, நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, ஜே.சி. அலவத்துவல மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரை உள்ளடக்கிய தூதுக்குழு இன்று (27) அதிகாலை தாய்லாந்துக்கு சென்றுள்ளது.

இவர்கள், பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கும் அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கும் இராஜதந்திரிகள், தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் மூன்றாம் தரப்பினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.

இதற்காக இந்த குழுவினர் மியன்மார் மற்றும் ரஷ்யாவில் ஐந்து நாட்கள் தங்கியிருப்பார்கள்.

இதேவேளை, தமது பயணத்தின் போது, தாய்லாந்து மற்றும் மியன்மாரின் சங்க நாயக்க தேரர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகளையும் சந்தித்து மகாநாயக்க தேரர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களையும் கையளிக்கவுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version