தொழிலாளர் சட்ட திருத்ததை கண்டிக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை

புதிய தொழிலாளர் சட்டத்திற்கான தற்போதைய முன்மொழிவுகளை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளின் முறையான ஆலோசனைக்குப் பிறகே தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச தரம் மற்றும் உரிமைகளை அகற்றுவதன் மூலம் தொழிலாளரின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் உத்தேச புதிய சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுள்ளது. 

தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாவிட்டால், எதிர்காலத்தில் கடும் எதிர்ப்புகள் உருவாகலாம் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version