தேயிலைக்கு பதிலாக கோப்பி செய்கை, நடவடிக்கை எடுத்த ஜீவன்

நுவரெலியா களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகத்தின் இந்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து 02 வாரங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேயிலை செடிகளை அகற்றி, கோப்பி செய்கையை முன்னெடுப்பதற்காக, தோட்ட நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்ட இயந்திரத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படும் தோட்டத் தலைவர்கள் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கமர்த்தப்பட வேண்டும் என பேச்சுவார்த்தை நடாத்தப்பட்ட போதிலும், பெருந்தோட்ட நிறுவனம் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.இதனையடுத்து, அமைச்சர் ஜீவன் தொண்டமான், குறித்த பகுதிக்கு  நேற்று (30.05) சென்றிருந்தார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த நிறுவனம் இணக்கம் தெரிவித்த நிலையில், போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேலும், கோப்பி செய்கை தொடர்பாக தீர்மானத்தை தற்காலிகமாக களனிவெளி நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version