எலோன் மஸ்க்கின் முதலீட்டினை விமர்சித்த சுனில் ஹந்துநெத்தி 

எலோன் மஸ்க் போன்ற பொருளாதாரத்திற்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்வதற்கு அரசாங்கம் வாய்ப்பு வழங்குவதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி குற்றம் சுமத்தியுள்ளார். 

எலோன் மஸ்க் போன்றவர்களை நாட்டிற்கு அழைத்து வர முதலீட்டுச் சபை முற்றாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ஹந்துநெத்தி சுட்டிக்காட்டியுள்ளார். 

எலோன் மஸ்க் போன்ற முதலீட்டாளர்கள் எதனையும் இலவசமாக வழங்குவதில்லை என தெரிவித்த ஹந்துநெத்தி, அவ்வாறான வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்குள் அழைத்து வருவதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

பொருளாதாரப் பரிமாற்ற சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதன் ஊடாக இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version