இந்தியாவில் கைதான 04 IS அமைப்பினரை வழிநடத்தியவர் யார் தெரியுமா?

ISIS பயங்கரவாத அமைப்பினர் என்ற குற்றச்சாட்டில் இந்தியாவில் கைதான இலங்கையர்கள் நால்வரின் தலைவராக கருதப்படும் ஒஸ்மன் புஷ்பராஜை 72 மணித்தியாலங்கள் தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் நேற்று (31.05) கைது செய்யப்பட்டார்.

தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இவர் இலங்கையிலிருந்து இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வரையும் வழிநடத்தியிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version