பயனற்ற அபிவிருத்தி திட்டங்களே வங்குரோத்து நிலைக்கு காரணம் -சஜித் 

சமூகத்தில் பல்வேறு வகையான கொடுக்கல் வாங்கல் நடந்து வருகின்றன. கல்வியறிவு அதிகரிக்கும் போது பயனுள்ள போக்கும், அறியாமை ஊக்குவிக்கப்படும் போது, ​​பழமைவாத போக்கும் வெளிப்படும். ஒவ்வொரு 5, 6 ஆண்டுகளுக்கு ஒரு அரசியல் மாற்றம் நடந்த வருகிறது. கூட்டங்கள், பரப்புரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் விவாதங்கள் மூலம் இது நடைபெறுகிறது. விடயங்களை பேசி தீர்த்துக் கொள்ள வழியிருந்த போதும் வாள்கள், கத்திகள், பயோனெட்டுகள் மற்றும் வெடிகுண்டுகள் கூட பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் இந்நாட்டில் இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 215 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, முல்கிரிகல, வீரகெட்டிய, ஹிகுருமுலன, ஸ்ரீ பேமானந்த கனிஷ்ட வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த மாதம் 31ம் திகதி இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.  

குடிமக்களின் அறிவும், புத்திசாலித்தனமும், ஞானமும் வளரும் போது, ​​தேவையற்ற வழிமுறைகளை விடுத்து, உயிரைக் காப்பாற்றவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும், கல்வி அறிவு சார்ந்த முடிவுகளை எடுக்கவும் அவர்கள் ஊந்தப்படுவார்கள். எனவே சமநிலையான ஆளுமை பன்புகளை தன்னகத்தே கொண்ட மனித வளம் உருவாக வேண்டும். இதற்கு நாட்டின் பாடசாலைக் கல்வி முறையை சகல வசதிகளுடன் பலப்படுத்துவதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே, எதிர்காலத்தில் நாட்டுக்கு இலாபம் தராத பாரிய அளவிலான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர், பாடசாலை கட்டமைப்பில் உள்ள பௌதீக மற்றும் மனித வளப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தற்போதும் கூன கடன் பெற்று இலாபம் ஈட்டாத திட்டங்களில் முதலீடு செய்தமையாலயே எமது நாடு வங்குரோந்தடைந்துள்ளது.அந்த திட்டங்களுக்கு செலவழித்த பணத்தை மீட்டெடுப்பதற்கான வழிகளை சிந்திக்காமல் தனிப்பட்ட சிலரின் இமேஜை கட்டியெழுப்புவதற்காக கடன்களை பெற்று செயற்திட்டங்களை முன்னெடுத்தமையினால் நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பலவிதமான கதைகளுக்கும், வார்த்தைகளுக்கும் ஏமாந்து, ஒரு சிலரின் குடும்பங்களுக்கு நாட்டையே எழுதிவைத்துள்ளமையால் நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையிலிருந்து மீள நாட்டின் எதிர்கால சந்ததிக்கு சிறந்த கல்வியை போதித்து அதன் மூலம் அவர்கள் தற்போதைய வங்குரோத்து நிலையிலிருந்து வெளிவர ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.

தற்போது உலகிலும், நமது நாட்டிலும் கல்வித்துறை கற்பித்தல் கரும்பலகையில் இருந்து, வெள்ளைப் பலகை, ஸ்மார்ட் திரை வரை சென்று, செயற்கை நுண்ணறிவு மூலம் நாளுக்கு நாள் புதிய ஆப்கள் உருவாகி வருகிறது. நம் நாடாக தொடர்ந்து வெற்று வீராப்பு பேசுவதை விடுத்து, புதிய தொழில்நுட்ப யுகத்துக்குள் நாமும் பிரவேசிக்க வேண்டும். உலகில் தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது, பேசும் தருணத்தில் கூட உலகம் தொழில்நுட்பத்தில் முன்னேறி வரும் வேளையில் எமது நாடு வேகமாக இதில் முன்னேற வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version