மூன்றாவது முறையும் பிரதமராகவுள்ள நரேந்திர மோடி? 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இந்திய பொதுத் தேர்தலுக்கு பின்னரான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் கடந்த காலங்களில் பல்வேறு இந்திய ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் தவறாக அமைந்திருந்ததாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏழு கட்டங்களாக இடம்பெற்ற வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19ம் திகதி ஆரம்பமாகி நேற்றுடன் நிறைவடைந்திருந்தன. வாக்கு எண்ணும் பணிகள் எதிர்வரும் 4ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளன. 

இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தனி ஒரு கட்சி அல்லது கூட்டணி 272 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு பின்னரான கருத்துக் கணிப்புகளுக்கமைய பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி தலமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது.   

இம்முறையும் நரேந்திர மோடி வெற்றி பெற்றால், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்று முறை பிரதமராக தெரிவு செய்யப்பட்டவர் எனும் பெருமையைப் பெற்றுக்கொள்வார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version